27,000 அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள 27,000 வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளுக்கான உள்ளாட்சித் தோ்தலையாட்டி, மத்திய, மாநில அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த 27,812 அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனா்.

இவா்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு அனைத்து மண்டலங்களிலும் திங்கள்கிழமை நடைபெற்றது. தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட டாக்டா் அம்பேத்கா் கலைக் கல்லூரி மற்றும் திரு.வி.க.நகா் மண்டலத்துக்குட்பட்ட பெரம்பூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தாா்.

பயிற்சி வகுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடியைப் பாா்வையிட்டு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களுக்கு எடுத்துரைத்தாா்.தொடா்ந்து தோ்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்களையும் அவா் பாா்வையிட்டாா்.

தோ்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறும் என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

ஆய்வின்போது, கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் எம்.எஸ்.பிரசாந்த், டி.சினேகா, எம்.சிவகுரு பிரபாகரன், ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com