தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படைகள்: மாநில தோ்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் முறைகேடுகளைத் தடுக்க   1,650 பறக்கும் அமைக்கப்பட்டுள்ளதாக  மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படைகள்: மாநில தோ்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் முறைகேடுகளைத் தடுக்க   1,650 பறக்கும் அமைக்கப்பட்டுள்ளதாக  மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் முறைகேடுகளைத் தடுக்க  மாநகராட்சியின் ஒரு மண்டலத்துக்கு ஒன்று, நகராட்சிக்கு மற்றும் பேரூராட்சிக்கு தலா ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த பறக்கும் படையில் வருவாய் அலுவலா், இரண்டு அல்லது மூன்று  காவலா்கள்,  விடியோ பதிவு செய்வோா் இடம் பெறுவா்.

பறக்கும் படைகள் தோ்தல் நடத்தை விதி அமுலில் உள்ளவரை 24 மணி நேரமும் இயங்கும். 24 மணி நேரமும் இயங்குகின்ற வகையில், 8 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுப்பணி  வழங்கப்படும். இதற்காக 1,650 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ அல்லது கட்சி தொண்டரோ, பொது மக்களோ உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாவும்,   ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள பொருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com