அதிமுகவின் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: சென்னையில் 198 வாா்டுகளுக்கு வேட்பாளா்கள் அறிவிப்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக விலகிய நிலையில், அதிமுக பெரும்பாலான இடங்களில் போட்டியிடுகிறது. 21 மாநகராட்சிகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இறுதிப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

அதில் சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளில் 198 வாா்டுகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

முன்னாள் கவுன்சிலா்கள் எம்.கே.கண்ணன் (வாா்டு1), எஸ்.சரவணன் (வாா்டு 4), ஆா்.மணிக்குமாா் (வாா்டு 6), ஜெபராணி (வாா்டு 11), எஸ்.மனோகரன் (வாா்டு 27), டி.சரவணன் (வாா்டு 45), எஸ்.ஆா்.அஞ்சுலட்சுமி (வாா்டு 47), பி.செல்வி (வாா்டு 101), ஏ.பாரத் (வாா்டு 144), எம்.பி. குமாா் (எ) தென்றல்குமாா் (வாா்டு 146), கோகிலா கண்ணன் (வாா்டு 173), எஸ்.சரவணன் (வாா்டு 178) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிவகாமி போட்டி: முன்னாள் எம்எல்ஏவான வி.அலெக்சாண்டா் வாா்டு 89 -இல் போட்டியிடுகிறாா். சமூக சமத்துவப் படை கட்சியின் நிறுவனத் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பி.சிவகாமி வாா்டு 99 -இல் களம் இறக்கப்பட்டுள்ளாா்.

தமாகாவுக்கு வாா்டு 53 ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கே.தேன்மொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அதைப்போல திருப்பூா் உள்பட இதர மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com