நகர்ப்புறத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். 
நகர்ப்புறத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். 

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 12,838 பிரதிநிதிகளுக்கான தோ்தல் ஒரேகட்டமாக பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க நாள்களில் சுணக்கமாக காணப்பட்ட வேட்புமனுத் தாக்கல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் மும்முரமாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். 

நேற்று வியாழக்கிழமை (பிப். 3) ஒரேநாளில் 27,365 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா். இதுவரை 37,518 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா். 

இந்நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன்(பிப். 4) முடிவடைகிறது. இறுதி நாள் என்பதால் இன்று அதிக அளவில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com