நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வேட்புமனுத் தாக்கல் நிறைவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. 
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 12,838 பிரதிநிதிகளுக்கான தோ்தல் பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜன.30) தவிர மற்ற நாள்களில் நடைபெற்று வந்தது.

 தொடக்க நாள்களில் சுணக்கமாக காணப்பட்ட வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள்களில் சூடு பிடித்தது. அனைத்துக் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்ததால், வேட்மனு தாக்கல் செய்வாரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. 
5 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வேட்புமனு தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் அதிக அளவில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. பிப்.7ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள். 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com