‘சமூகநீதிக் கூட்டமைப்பில் அதிமுக இணையாது’: ஓபிஎஸ் அறிவிப்பு

தமிழக முதல்வர் முயற்சியில் உருவாகும் சமூக நீதிக் கூட்டமைப்பில் அதிமுக இணையாது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 
‘சமூகநீதிக் கூட்டமைப்பில் அதிமுக இணையாது’: ஓபிஎஸ் அறிவிப்பு
‘சமூகநீதிக் கூட்டமைப்பில் அதிமுக இணையாது’: ஓபிஎஸ் அறிவிப்பு

தமிழக முதல்வர் முயற்சியில் உருவாகும் சமூக நீதிக் கூட்டமைப்பில் அதிமுக இணையாது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

தேசிய அளவில் சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதியைக் காக்க இந்த சமூக நீதிக் கூட்டமைப்பு உருவாக்கப்படுதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் தேசிய அளவில் சோனியா காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ்), லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்), ஃபரூக் அப்துல்லா (ஜம்மு காஷ்மீா் தேசிய மாநாடு), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ), எச்.டி. தேவெ கவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), என். சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்), நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதா தளம்), மம்தா பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்) உள்ளிட்ட பாஜக அல்லாத பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கடிதத்திற்கு பதிலளித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “மத்திய அரசில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்தபோது சமூக நீதிக்காகவோ அல்லது மாநில சுயாட்சிக்காகவோ குரல்கொடுக்காமல் இருந்துவிட்டு தற்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்காத தருணத்தில் அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பை உருவாக்கி அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com