அண்ணே ஒரு காபி குடுங்க...வரிசையில் நின்று காபி குடித்த மதுரை எம்பி

தேநீர் குடிப்பதற்காக கடைக்கு சென்ற அவர், மக்களுடன் மக்களாக வரிசையில் நின்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எம்.பி. சு.வெங்கடேசன்
எம்.பி. சு.வெங்கடேசன்

எளிமையின் சின்னமாக கம்யூனிஸ்டுகள் திகழ்வது நேற்று, இன்றாக நடைபெறுவது அல்ல. பல காலமாகவே, அவர்கள் எளிமையுடன் மக்கள் நலனுக்கு குரல் கொடுப்பது இருந்துவருகிறது. வார்டு கவுன்சிலராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் எப்போதும் மக்களுடன் மக்களாகவே இருந்துவருகின்றனர்.

தமிழ்நாட்டில் நல்லகண்ணுவில் தொடங்கி திரிபுராவில் மானிக் சர்கார் வரை நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் தலைவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்துவருகின்றனர்.

அந்த வரிசையில், இன்றும் வாடகை வீட்டில் தங்கும் மதுரை எம்பியும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் திகழ்கிறார். மக்களின் உரிமைகளுக்காக சாலை தொடங்கி நாடாளுமன்றம் வரை இவர் குரல் கொடுத்துவருகிறார்.

இந்நிலையில், தேநீர் குடிப்பதற்காக கடைக்கு சென்ற அவர், மக்களுடன் மக்களாக வரிசையில் நின்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேநீர் கடையின் உரிமையாளர் வரிசையில் நிற்க வேண்டாம் என கேட்டு கொண்ட பிறகும், அவர் வரிசையில் சென்றது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விடியோவை, தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அவர், "
அண்ணே ஒரு காபி குடுங்க !
சாரம் கட்டி வரிசையில் விடுவது 
சாராயக்கடைகளில் மட்டுமல்ல …
மதுரை விசாலம் காபி கடையிலும் உண்டு …
மதுரை முகவரிகளில் ஒன்று விசாலம் காபி …" என பதிவிட்டுள்ளார்.

எளிமையுடன் இருப்பதாத விளம்பரத்திற்காக காட்டி கொள்பவர்கள் மத்தியில், மதுரை எம்பி மற்ற தலைவர்களுக்கும் எடுத்துக்காட்டாகவே உள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com