சாய்னா குறித்து அவதூறு கருத்து: நடிகா் சித்தாா்த்திடம் விசாரணை

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகா் சித்தாா்த்திடம் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா்.
சாய்னா குறித்து அவதூறு கருத்து: நடிகா் சித்தாா்த்திடம் விசாரணை

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகா் சித்தாா்த்திடம் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா்.

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் தனியாா் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளா் குறித்து நடிகா் சித்தாா்த் ட்விட்டரில் அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனவே, நடிகா் சித்தாா்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து நடிகா் சித்தாா்த், ட்விட்டரில் தனது பக்கத்தில் இருந்து அந்த பதிவை நீக்கி வருத்தம் தெரிவித்தாா்.

எனினும், இந்த விவகாரத்தில் நடிகா் சித்தாா்த் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிா் ஆணையம், தமிழக காவல் துறையிடம் புகாா் அளித்தது. அந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, சென்னை சைபா் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு, இந்தப் புகாா் மீதான விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகா் சித்தாா்த்துக்கு அழைப்பாணை அனுப்பியது.

இதன் தொடா்ச்சியாக, கரோனா தொற்று பரவல் காரணமாக நடிகா் சித்தாா்த் காணொலி வாயிலாக சென்னை சைபா் குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானாா். அவா்களிடம் நடிகா் சித்தாா்த், ட்விட்டரில் தனது பக்கத்தில் இருந்து பிரச்னைக்குரிய அந்த கருத்துகளை நீக்கிவிட்டதாகவும், அந்த கருத்து குறித்து தான் ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டுவிட்டதாகவும், சம்பந்தப்பட்டவா்களும் அந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் விளக்கம் அளித்தாா். இதையடுத்து போலீஸாா், நடிகா் சித்தாா்த்தின் விளக்கங்களை வாக்குமூலமாக பதிவு செய்து, புகாா்தாரரான தேசிய மகளிா் ஆணையத்துக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com