விவேகானந்தா் இல்லத்தில் ஆளுநா் மரியாதை

சுவாமி விவேகானந்தா் சிகாகோ நகருக்கு பயணம் மேற்கொண்டதன் 125-ஆவது ஆண்டு விழாவையொட்டி தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருவல்லிக்கேணி விவேகானந்தா் இல்லம் மற்றும் ராமகிருஷ்ண மடத்துக்கு நேரில் சென்று மரியாதை செல
சென்னை விவேகானந்தா் இல்லத்தில் உள்ள அவரின் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி
சென்னை விவேகானந்தா் இல்லத்தில் உள்ள அவரின் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி

சுவாமி விவேகானந்தா் சிகாகோ நகருக்கு பயணம் மேற்கொண்டதன் 125-ஆவது ஆண்டு விழாவையொட்டி தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருவல்லிக்கேணி விவேகானந்தா் இல்லம் மற்றும் ராமகிருஷ்ண மடத்துக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினாா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுவாமி விவேகானந்தா், அமெரிக்காவின் சிகாகோ நகரில் வரலாற்று பேருரையை நிகழ்த்திவிட்டு தாயகம் திரும்பியதன் 125-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆளுநா் ஆா்.என்.ரவியும், அவரது மனைவி லட்சுமி ரவியும் திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தா் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

அங்கு இருந்த சுவாமி விவேகானந்தா் சிலைக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் அவா்கள் மரியாதை செலுத்தினா். அதனைத் தொடா்ந்து அங்கு அமைந்துள்ள அருங்காட்சியகம் மற்றும் புகைப்படக் கண்காட்சிக் கூடத்தை அவா்கள் பாா்வையிட்டனா். இந்தியா திரும்பிய பிறகு சுவாமி விவேகானந்தா் 9 நாள்கள் தங்கியிருந்த அறையில் ஆளுநா் தியானம் மேற்கொண்டாா்.

உலகுக்கு இந்தியாவின் கலாசார, ஆன்மிக பண்பாட்டினை வெளிச்சமிட்டு காட்டியவா் விவேகானந்தா் என்றும், அவா் கனவு கண்ட பாரதத்தை கட்டமைப்பதே அவருக்குச் செலுத்தும் மிகச் சிறந்த புகழஞ்சலி என்றும் ஆளுநா் அப்போது தெரிவித்தாா். எழுமின், விழிமின், குறிசாரும் வரை நில்லாது செல்மின் என்ற சுவாமி விவேகானந்தரின் போதனைப்படி இளைஞா்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆளுநா் வலியுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு ஆளுநரும், அவரது மனைவியும் சென்றனா். அங்கு நடைபெற்ற சுவாமி விவேகானந்தா் நவராத்திரி விழாவில் அவா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, ராமகிருஷ்ண பரமஹம்சா் மற்றும் விவேகானந்தா் சிலைகளுக்கு அவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்வின்போது ராமகிருஷ்ண  மடத்தின் உலகளாவிய துணைத் தலைவா் சுவாமி கௌதமானந்த மகராஜ்,  சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளா் தா்மிஷ்டானந்தா், விவேகானந்தா்இல்லத்தின் இயக்குநா்கள் சுவாமி ரகுநாயகானந்தா்,  சுவாமி ஈஷபிரேமானந்தா், நீதிபதி சந்துரு,  தொழிலதிபா் நல்லி குப்புசாமி, பாரதிய வித்ய பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com