நெகமம் பேரூராட்சியைக் கைப்பற்றியது திமுக

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
திமுக (கோப்புப் படம்)
திமுக (கோப்புப் படம்)

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 44 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் மனுக்கள் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில் திங்கள்கிழமை மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை இரவு வெளியான நிலையில், நெகமம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளில் திமுக 8 வார்டுகளிலும், ஒரு வார்டில் சுயேச்சையும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வார்டுகள் 3, 6, 7, 8, 9, 11, 12, 14, 15 ஆகியவற்றில் 9 ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ரவி ராமசாமியை எதிர்த்து யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

மற்ற 8 வார்டுகளிலும் முறையே பிரியா, பரமேஸ்வரி, தேவிகா, நந்தவேல் முருகன், கஸ்தூரி, கலைமணி, நாகராஜ், சபரீஸ்வரன் ஆகியோரை எதிர்த்து போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த அனைவரும் மனுக்களை திரும்பப் பெற்றதால் அவர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com