தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்து முதல்வர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சட்டம்-ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சட்டம்-ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால்,  சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

தமிழகத்தில் காவல் நிலையங்களில் வரும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்தல், குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு, காவல்துறையை நவீனப்படுத்துதல், தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com