நீட் விலக்கு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்: நேரலை செய்யத் திட்டம்

நீட் விலக்கு தொடர்பான சிறப்புக் கூட்டம் நாளை(பிப்.8) சட்டப்பேரவையில் நேரலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
நீட் விலக்கு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்: நேரலை செய்யத் திட்டம்

நீட் விலக்கு தொடர்பான சிறப்புக் கூட்டம் நாளை(பிப்.8) சட்டப்பேரவையில் நேரலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைக்கு ஏற்ப, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆா்.என்.ரவி, பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பினார். 

இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற பேரவை கட்சித் தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு அதன்படி பிப்ரவரி 8 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இதையடுத்து, இந்த சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை நேரலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் கூட்டத்தை நேரலையில் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முதல்முறையாக நேரலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com