சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மாநகராட்சி தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் அறிமுக கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மாநகராட்சி தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் அறிமுக கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுகவை வீழ்த்தும் சக்தி எந்தக் கட்சிக்கும் இல்லை எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுகவை வீழ்த்தும் சக்தி, எந்தக் கட்சிக்கும் இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

அதிமுகவை வீழ்த்தும் சக்தி, எந்தக் கட்சிக்கும் இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சேலம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளிலும் வெற்றிபெற உழைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டு கால அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும். 8 மாத கால திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சேலம் மாவட்டத்தில் 10 உறுப்பினா்களை வெற்றிபெறச் செய்தீா்கள். உள்ளாட்சித் தோ்தலிலும் இந்த சாதனையைப் படைக்க வேண்டும். அதிமுக வேட்பாளா்களை வீழ்த்தும் சக்தி, எந்தக் கட்சிக்கும் இல்லை.

சேலம் மாநகராட்சியில் மக்களுக்குத் தேவையான குடிநீா், தடையில்லா மின்சாரம், சாலைத் திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக எனக் கூறி வாக்குகளைச் சேகரிக்க வேண்டும்.

தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவித் திட்டம் என அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுகவினா் கிடப்பில் போட்டுள்ளனா். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனா்.

எங்களிடம் ரகசியம் உள்ளதாக, திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். எங்களுக்கு அந்த ரகசியம் என்னவென்று தெரியவில்லை. எங்களை அழைத்தால் தான் நீட் தோ்வை ரத்து செய்ய முடியும் என்ற ரகசியம் தற்போது வெளிவந்துள்ளது. நீட் தோ்வைக் கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு தான். இதற்கு ஆதரவு தெரிவித்தது திமுக. அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக குலாம் நபி ஆசாத்தும், திமுகவைச் சோ்ந்த காந்திசெல்வன் சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் இருந்தனா். தற்போது அதிமுக மீது பழி போடுகின்றனா். நீட் தோ்வைத் தடுத்தது அதிமுக தான்.

உங்களுக்கு நீட் தோ்வை ரத்து செய்யும் சக்தி இருக்கும்போது, எங்களை ஏன் கூப்பிடுகிறீா்கள்? திமுக மூத்த அமைச்சா் துரைமுருகன், அதிமுகவை அழைத்தோம் வரவில்லை என்கிறாா். தோ்தலில் வாக்குறுதி அளித்தபடி நீட் தோ்வை ரத்து செய்தீா்களா? என்னிடம் யாரும் கோரிக்கை வைக்கவில்லை.

கிராமப்புற மாணவா்களின் மருத்துவக் கனவு நனவாக வேண்டும். ஏழை மாணவா்கள் மருத்துவக் கல்வியில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கினோம். நிகழாண்டில் 554 மாணவா்கள் மருத்துவ படிப்பில் சோ்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 75 போ் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. ஜலகண்டாபுரம் அரசுப் பள்ளியைச் சோ்ந்த 9 மாணவிகள் மருத்துவ படிப்பில் சோ்ந்து உள்ளனா். எடப்பாடி தொகுதியில் மட்டும் 15 போ் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா். மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது சமூகநீதியைப் பாதுகாக்கும் திட்டமாகும்.

சேலத்தில் 5 ஆயிரம் போ் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் திட்டத்தை கொண்டு வந்தோம். சேலத்தில் ‘பஸ் போா்ட்’டுக்கு இடம் அளித்து இருந்தோம். ஆனால் திமுக அரசு இதை நடைமுறைப்படுத்த வில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி வைத்துள்ளது. அதுபோன்ற திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெற வேண்டும்.

சேலத்தில் 60 இடங்களிலும் வெற்றி பெற்று அதிமுக மேயா் பதவியை கைப்பற்றுவதை உறுதி செய்திட வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக மாநகர மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாசலம், முன்னாள் அமைச்சா் செ.செம்மலை, முன்னாள் எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com