
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,516 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 37 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 5,104 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று 1,15,898 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், புதிதாக 4,516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,20,505-ஆக அதிகரித்துள்ளது.
படிக்க | கேரளம்: புதிதாக 29,491 பேருக்கு கரோனா
ஒரு நாளில் மட்டும் 37 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பாதிப்பு 37,809-ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் 20,237 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 32,92,559-ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும் 90,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 3.9%-ஆக உள்ளது.
படிக்க | ஆஸ்கர் இறுதிப் பட்டியல்: ஜெய்பீம் இடம்பெறவில்லை -ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னையில் புதிதாக 792 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 7,43,829-ஆக அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...