
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
அமைதி திகழும் மாநிலமாகவும், சட்டம் - ஒழுங்கு சீராக உள்ள மாநிலமாகவும் தமிழகம் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை அண்ணா அறிவாலயத்திலிருந்து காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
படிக்க | கே.என். ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது உயர்நீதிமன்றம்
அப்போது பேசிய அவர், மதம், சாதியை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. சில கட்சிகள் தோல்வியை மறைக்க இதுபோன்று செய்யலாம்.
திமுக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரசாரக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைசர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.