
கோப்புப்படம்
கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது.
ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என்று கூறியுள்ளார்.