கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். 
கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். 

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய இடங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நிறைவடைந்தது. இந்த ஆய்வின்போது பண்டைய கால தமிழா்கள் பயன்படுத்திய அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள், மண் சட்டிகள், குறியீடுகளுடன் கூடிய பானைகள்,தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. மேலும் மனித எலும்புக் கூடுகளும் கண்டறியப்பட்டன. கடந்த செப்டம்பா் மாதம் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்தது.

அதைத்தொடா்ந்து கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வுப்பணி தொடங்கப்பட வேண்டும் என தமிழாா்வலா்கள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனா். ஆனால் 8 ஆம் கட்ட அகழாய்வு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வா் மு .க. ஸ்டாலின் கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கும் எனவும் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த மாதம் 21 ஆம் தேதி அறிவித்தாா்.

இதையடுத்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளையும், கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேடு ஆகிய 4 இடங்களில் 2 ஆம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com