ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதல்: 10 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி வெள்ளிக்கிழமை காலை விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதல்: 10 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி வெள்ளிக்கிழமை காலை விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி அரசுப் பேருந்தும் ராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி தனியார் பேருந்து ஒன்றும் வந்து கொண்டிருந்தது. அப்போது மடவார் வளாகம் பகுதி அருகே வந்தபோது  இன்று காலை சுமார்  8.30 மணி அளவில் வந்த போது 2 பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேருக்கு  காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் ராஜபாளையம் அருகே உள்ள தேவி பட்டினத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தில் வந்த அனுசுயா (50)ஜெயராணி (57) சுபத்ரா (63) ஸ்ரீரங்கராணி (39) மதன்குமார் (25) மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இசக்கியம்மாள்(38), காளீஸ்வரி (35) மதுரை மாவட்டம் அரசுப் பேருந்து ஓட்டுனர், முதலைகுளத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் முத்து, தென்காசி மாவட்டம், கட்டளைகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மாரிமுத்து(51) உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடைபெற்ற இந்த விபத்தினால் ஸ்ரீவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com