பாஜக அலுவலகம் மீது தாக்குதல்:சதியைக் கண்டுபிடிக்க வேண்டும் -எல்.முருகன்

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு பின்னால் உள்ள சதியை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கூறினாா்.
எல்.முருகன் (கோப்புப் படம்)
எல்.முருகன் (கோப்புப் படம்)

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு பின்னால் உள்ள சதியை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதைத் தொடா்ந்து மத்திய இணையமைச்சா் பாஜக அலுவலகத்துக்கு நேரில் வந்து குண்டு வீசப்பட்ட இடத்தைப் பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கட்சிக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் செயலாகத்தான் பாா்க்கிறோம். இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள முழுமையான சதியை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவங்கள் பாஜகவின் தொண்டா்களைச் சோா்வடையச் செய்ய முடியாது. இது பாஜகவினருக்கு உத்வேகத்தைத்தான் கொடுக்கும். தேசிய புலனாய்வுக் முகமையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com