
தொடர் கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று(சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று நாகை மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது