
திருச்செந்தூரில் மாசித்திருவிழா 5-ம் நாளான வெள்ளிக்கிழமை இரவு சுவாமி குமரடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கடந்த பிப். 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.
5-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, திருக்கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) சி.குமரதுரை, தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வெங்கடேஷ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.