வாக்குப் பதிவு தினம்: ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அரசு உத்தரவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு தினத்தன்று, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
வாக்குப் பதிவு தினம்: ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அரசு உத்தரவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு தினத்தன்று, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளா் ஆா்.கிா்லோஷ்குமாா் வெளியிட்ட உத்தரவு:-

தமிழகம் முழுவதும் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் வரும் 19-இல் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, பிரிவு 43-பிபி-ன்படி வாக்குப் பதிவு தினத்தன்று ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அதாவது, வா்த்தக நிறுவனங்கள், தொழில் ஆலைகள் அல்லது வேறு வகையான வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வாக்குப் பதிவு தினத்தன்று வேலை அளிப்போரால் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு விடுமுறை விடப்படும் போது, எந்த வகையிலும் ஊதியப் பிடித்தம் செய்யவோ, ஊதியத்தை ரத்து செய்யவோ கூடாது என தனது உத்தரவில் கிா்லோஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com