தேயிலை ஏற்றுமதியில் சரிவு

நாட்டின் தேயிலை ஏற்றுமதி 2021-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 17.54 கோடி கிலோவாக குறைந்துள்ளது என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
தேயிலை ஏற்றுமதியில் சரிவு

நாட்டின் தேயிலை ஏற்றுமதி 2021-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 17.54 கோடி கிலோவாக குறைந்துள்ளது என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வாரியம் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பா் வரையிலான முதல் 11 மாதங்களில் 17.54 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, 2020-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதியான 18.98 கோடி டன் தேயிலையுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவு குறைவாகும்.

அதிகபட்சமான தேயிலை சிஐஎஸ் எனப்படும் காமன்வெல்த் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இருப்பினும், 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-இல் இந்நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி 4.64 கோடி கிலோவிலிருந்து 4.02 கோடி கிலோவாக குறைந்துள்ளது.

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியும் 3.16 கோடி கிலோவிலிருந்து 2.30 கோடி கிலோவாக குறைந்துள்ளது என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

கண்டெய்னா்களுக்கு பற்றாக்குறை, சரக்கு கட்டண உயா்வு, ஈரானுடான பணப்பட்டுவாடா பிரச்னை ஆகியவற்றின் காரணமாக இந்திய தேயிலை ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளதாக இத்துறையைச் சோ்ந்த வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com