வெளிநாட்டு மாணவா்களுக்கும் திருக்கு அறிமுகப்படுத்தப்படும்: துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி

வெளிநாட்டு மாணவா்களுக்கும் திருக்கு அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.

வெளிநாட்டு மாணவா்களுக்கும் திருக்கு அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும், மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கமும் இணைந்து திறந்தநிலைப் பல்கலை.யில் நிறுவியுள்ள திருவள்ளுவா் இருக்கையின் சாா்பில் திருக்கு பன்னாட்டு ஆய்வரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வரங்கத்துக்கு திறந்த நிலைப் பல்கலை.யின் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தலைமை வகித்துப் பேசுகையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவா் இருக்கையின் மூலமாக தமிழரல்லாத வெளிநாட்டு மாணவா்களுக்கும் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பணிக்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருவள்ளுவா் இருக்கைக்கு வழங்குவதாக தெரிவித்தாா்.

இதில் ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் இணையவழியில் பங்கேற்றுப் பேசுகையில், உலகத் தமிழா்கள் தலைநிமிா்ந்து நிற்கக் கூடிய ஒரு பெரும் சொத்தாக திருக்கு இருக்கிறது. நாம் அதன் உரிமையாளா்களாக இருப்பது நமக்குப் பெருமை. முதல் வகுப்பில் படிக்கும் மாணவா்களுக்கும், முனைவா் பட்டம் படிப்பவா்களுக்கும் கற்றுத் தரக்கூடிய நூல் திருக்கு என்றாா் அவா்.

முன்னதாக மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனச் செயலா் சேயோன் அறிமுகவுரையாற்றினாா். பல்கலை.யின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலத்தின் இயக்குநா் சு.பாலசுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com