எல்.ஐ.சி. பங்கு விற்பனை: சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதற்கு சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சி. பங்கு விற்பனை: சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதற்கு சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் அரசு நிறுவனமான எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரூ.63,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த முடிவிற்கு சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், எல்.ஐ.சி பங்கு விற்பனை - செபியில் நேற்று அறிக்கை தாக்கல். தனியார் மயம் நோக்கிய முதல் அடி. ஒன்றைக்கூட உருவாக்காதவர்கள் ஒன்றைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.

ஒன்றுபட்டு வென்றெடுப்பதை விவசாயிகள் கற்றுகொடுத்ததை தேசம் முன்னெடுக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போது எல்ஐசியின் 100 சதவீதம் அல்லது 6,32,49,97,701 பங்குகள் மத்திய அரசு வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com