எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் முடிவைத் திரும்பப் பெறுக: முதல்வர் ஸ்டாலின்

எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றிய முதல்வரின் சமூக ஊடகப் பதிவு:

"எல்.ஐ.சி. நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார்மயத்தை நோக்கிய - முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும். 

இம்முடிவு மக்களின் நலனையோ LIC நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று என்பது வெள்ளிடைமலை. ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டுமேயன்றி; தொடர் விற்பனையில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டக் கூடாது. 

முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட இம்முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று எல்.ஐ.சி. நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com