பிரதோஷ பூஜையின்போது, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த கைலாய நாதர் மூர்த்தி.
பிரதோஷ பூஜையின்போது, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த கைலாய நாதர் மூர்த்தி.

சுருளி மலையில் தென்கைலாய மூர்த்தி கோயிலில் பிரதோஷ பூஜை

தேனி மாவட்டம் சுருளி மலையில் தென் கைலாய மூர்த்தி கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ பூஜையில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கம்பம்: தேனி மாவட்டம் சுருளி மலையில் தென் கைலாய மூர்த்தி கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ பூஜையில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் சுருளிமலையில் சுருளிநாதர் எனும் தென்கைலாயமூர்த்தி கோயில் உள்ளது.  இங்கு திங்கள்கிழமை  மாசிமாத வளர்பிறை பிரதோஷ நாளை முன்னிட்டு தென்கைலாய மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.

கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சிவதரிசனம் பெற்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தந்திரி கணேஷ் திருமேனி செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com