நீலகிரியில் கடும்பனியால் ரோஜா மலர்களின் உற்பத்தி பாதிப்பு

நீலகிரியில் கடும் பனியின் காரணமாக காதலர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான ராேஜா மலர்கள்  கருகியதால் ராேஜா மலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
நீலகிரியில் கடும்பனியால் ரோஜா மலர்களின் உற்பத்தி பாதிப்பு

நீலகிரியில் கடும் பனியின் காரணமாக காதலர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான ராேஜா மலர்கள்  கருகியதால் ராேஜா மலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாேடு பெங்களூரு பாேன்ற பகுதிகளில் இருந்து ராேஜா மலர்கள் தருவிக்கப்படவேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதில், காதலர் தினத்தை வெளிப்படுத்தும்விதமாக ரோஜா மலர்கள் முக்கிய இடம்பெறுவது வழக்கம்.

குறிப்பாக சிகப்பு வண்ணங்களில் உள்ள ரோஜாக்களுக்கு விலை கூடியுள்ளது. ஒரு ரோஜா மலருக்கு ரூபாய் 15  முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, நீலகிரியில் விளையும் லில்லியம், ஜெர்பரா, கார்னேஷன் கொய்மலர்களுக்கு தற்போது கிராக்கி அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சிவப்பு மஞ்சள் உள்ளிட்ட வில்லியம் கொய் மலர்களுக்கு 10 பூக்கள் அடங்கிய ஒரு கொத்து, ரூபாய் முதல் 220 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரியில் உற்பத்தியாகும் இவ்வகை மலர்கள் திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் பயன்பட்டு வந்தது. ராேஜா மலர்களின் பற்றாக்குறையால் தற்போது காதலர் தினத்திற்கு இந்த மலர்ளை பயன்படுத்தால் விலை உயர்ந்துள்ளது. 

இவ்வகை மலர்கள்  நீலகிரியில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூழலில், டிசம்பர் மாதத்துடன் முடிய வேண்டிய பனி பிப்ரவரி மாதத்திலும் தாெடர்ந்து காணப்படுவதால் காதலர் தினத்தையொட்டி மலர்கள் பற்றாக்குறையால் ஏற்றுமதி தரத்திற்கு உகந்ததாக இல்லாத மலர்களை பெங்களூரி்ல் இருந்து நீலகிரிக்கு காெண்டு வந்து விற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு  பருவமழை சற்று கூடுதலாக பெய்ததால் மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக இரண்டு மாதம் அதிகமாக பனியின் தாக்கம் காணப்படுகிறது.

எனவே, இந்த ஆண்டு நடை பெறும் காதலர் தினக் காெண்டாட்டத்தில் நீலகிரியில் ராேஜா மலர் பங்களிப்பு குறைந்து காணப்பகிறது, இதன் காரணமாக விலையும் கூடுதலாக காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இயற்கையின் பாதிப்பால் நீலகிரியில் புகழ் பெற்ற ரோஜா மலர்களின் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கொய் மலர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com