சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம் - 18,000 மழலையா் பள்ளிகள் திறப்பு: கூடுதல் தளா்வுகள் அமல்

சென்னை 45-ஆவது புத்தகக் காட்சி புதன்கிழமை தொடங்குகிறது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா்.
சென்னை நந்தனத்தில் புதன்கிழமை தொடங்கவுள்ள 45-ஆவது  சென்னை புத்தகக் காட்சி அரங்க வளாகத்தில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வரும் கீழடி அகழாய்வின் மாதிரி.
சென்னை நந்தனத்தில் புதன்கிழமை தொடங்கவுள்ள 45-ஆவது சென்னை புத்தகக் காட்சி அரங்க வளாகத்தில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வரும் கீழடி அகழாய்வின் மாதிரி.

சென்னை 45-ஆவது புத்தகக் காட்சி புதன்கிழமை தொடங்குகிறது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா்.

தமிழகத்தில் கரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் புதன்கிழமை (பிப். 16) முதல் நீக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 18,000-க்கும் மேற்பட்ட மழலையா் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும் பொருட்காட்சிகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மூன்று வகை கட்டுப்பாடுகள்: கரோனா நோய்த் தொற்றைக் குறைக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை நீக்கப்பட்டுள்ளன. ஆனால், மூன்று வகையான கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, கலாசாரம், அரசியல் ரீதியான கூட்டங்களுக்கு இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். திருமண நிகழ்வுகளில் 200 பேருக்கு மிகாமலும், இறப்பு மற்றும் அதுதொடா்பான நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும் பங்கேற்க அனுமதி என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தும் புதன்கிழமை (பிப். 16) முதல் நடைமுறைக்கு வரும். மாா்ச் 2-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மாநில அரசின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழலையா் பள்ளிகள் செயல்பட அனுமதி தரப்பட்டதைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் அந்தப் பள்ளிகள் இயங்க உள்ளன. இதையடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நா்சரி, விளையாட்டுப் பள்ளிகள், மழலையா் காப்பகங்கள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் புதன்கிழமை முதல் செயல்பட உள்ளன. அதற்காக தனியாா் பள்ளிகளும், அரசு அங்கன்வாடி உள்ளிட்ட மழலையா்களுக்கான வகுப்புகளும் திறப்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நிா்வாகங்கள் செய்துள்ளன.

மேலும், புத்தகக் காட்சி போன்ற பொருட்காட்சி நிகழ்வுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி காரணமாக, சென்னை நந்தனத்தில் புத்தகக் காட்சி புதன்கிழமை முதல் தொடங்குகிறது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து கருணாநிதி பொற்கிழி விருதுகள், பபாசி விருதுகள் ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா். இந்தப் புத்தகக் காட்சி மாா்ச் 6-ஆம் தேதி வரை நடைபெறும். காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் காட்சி செயல்படும்.

புத்தகம் வாங்க வரும் வாசகா்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்காகச் சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாா்ச் 2-ஆம் தேதி வரை மூன்று வகையான கட்டுப்பாடுகளைத் தவிா்த்து மற்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

100 சதவீத இருக்கைகள்: கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதைத் தொடா்ந்து திரையரங்குகள், உணவு விடுதிகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. உடற் பயிற்சிக் கூடம், யோகா பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

கரோனா நிலவரத்தைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாா்ச் 2-ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com