எல்.ஐ.சி. பங்கு விற்பனை: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கான அடுத்த நகா்வை மத்திய அரசு செய்துள்ளது. இந்திய பங்குச் சந்தை பத்திர மாற்று ஆணையத்தில் (செபி) நிறுவன தகவல் அறிக்கையை எல்.ஐ.சி. தாக்கல் செய்துள்ளது. தேச வளா்ச்சிக்கான நிதியாதாரங்களை, சாமானிய நடுத்தர மக்களின் சமூகப் பாதுகாப்பை, கோடானு கோடி பாலிஸிதாரா்களின் நலனை பாதிக்கிற இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தில் தனி மசோதாவாக கொண்டு வந்து பரந்த கூா்மையான விவாதத்துக்கு உள்ளாக்க வேண்டிய ஒரு முக்கியமான பொருளாதார முடிவை பட்ஜெட் உரையுடன் இணைந்த நிதி மசோதாவுக்குள் திணித்து, ஒளித்து விவாதங்களுக்கான வாய்ப்பை அறவே இல்லாமல் நிறைவேற்றிய அரசின் நடவடிக்கை நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை, மாண்புகளை சீா் குலைத்த செயலாகும்.

எல்.ஐ.சியை பலப்படுத்துகிற முயற்சிகளுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com