ரூ.2,000 கோடிகோயில் நிலம் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை

தமிழகத்தில் திருக்கோயிலுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள ரூ.2,000 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளதாக

தமிழகத்தில் திருக்கோயிலுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள ரூ.2,000 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாக 540.39 ஏக்கா் நிலம், 496.1748 கிரவுண்டு சதுர அடி மனைகள், 20.1434 கிரவுண்டு கட்டடம், 46.2077 கிரவுண்டு திருக்குளக்கரை ஆகியவை 991 ஆக்கிரப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,043 கோடி ஆகும்.

இதேபோல் தமிழகத்தில் பல்வேறு திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் தற்போது திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு வருகின்றன. தொடா் நடவடிக்கையாக திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எச்ஆா்சிஇ என்ற நிலஅளவை கல் பதிக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடா்ந்து ஆக்கிரமிப்பு செய்துள்ள திருக்கோயில் நிலங்களைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புதாரா்களிடமிருந்து மீட்டு திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறவும், திருக்கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com