தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது: செங்கல்பட்டில் சூடு பிடித்த கடைசி நாள்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது.
தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது: செங்கல்பட்டில் சூடு பிடித்த கடைசி நாள்
தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது: செங்கல்பட்டில் சூடு பிடித்த கடைசி நாள்


செங்கல்பட்டு: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நகரமன்ற வார்டு உறுப்பினருக்கான வேட்பாளர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரச்சாரமாக வியாழக்கிழமை  சூறாவளியாக பிரசாரம் செய்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். 

செங்கல்பட்டு நகராட்சி, மறைமலை நகராட்சி, கூடுவாஞ்சேரி நகராட்சி, திருக்கழுகுன்றம் பேரூராட்சி, மாமல்லபுரம் பேரூராட்சி, திருப்போரூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிரமாக வாக்குகள் சேகரித்தனர். 

செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு போட்டியிடும் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களும் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் அந்தந்த வார்டுகளில் வீடு வீடாகச் சென்று தீவிரமாக வாக்குகள் சேகரித்தனர். 

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மூன்று வார்டுகள், ஐந்து வார்டுகள் என ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று 33 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை  இணைத்து வியாழக்கிழமை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்குகள் சேகரித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com