நகர்ப்புற தேர்தல்: தமிழகத்தில் தீவிரமடைந்த இறுதி கட்டப் பிரசாரம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதால், வேட்பாளா்களின் இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதால், வேட்பாளா்களின் இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை (பிப்.19) தோ்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 57 ஆயிரத்து 778 போட்டியிடுகின்றனா்.

பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், இன்று மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

தோ்தலில் வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மொத்தம் சுமாா் 1,800 மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரசாரம் முடிவுக்கு வந்த பின்னா், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளா்கள் அல்லாத, வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், கட்சித் தொண்டா்கள் அனைவரும் அந்த உள்ளாட்சிப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com