
ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை தோ்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 57 ஆயிரத்து 778 போட்டியிடுகின்றனா். தோ்தலில் வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மொத்தம் சுமாா் 1,800 மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கோவையில் அனைத்து வார்டுகளிலும் போலீஸ் துணையுடன் பண விநியோகம் செய்யப்படுகிறது.
இதையும் படிக்க- கேரள ஆளுநரின் முல்லைப் பெரியாறு பேச்சு உச்சநீதிமன்ற அவமதிப்பாகும்: துரைமுருகன்
அதிமுகவின் கோட்டையான கோவையை கைப்பற்ற திமுக இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. மக்களிடம் திமுக செல்வாக்கை இழந்துள்ளது. அதிமுகவினர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுகிறது. வெளியூரைச் சேர்ந்தவர்கள் இங்கேயே தங்கி வன்முறையை உருவாக்க திட்டமிட்டமிட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, குண்டர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும், தேர்தல் ஆணையமும் தலையிட்டு ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.