சென்னையில் மந்தமான வாக்குப்பதிவு

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைக் காட்டிலும் சென்னையில் வாக்குப்பதிவானது தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் மந்தமான வாக்குப்பதிவு
சென்னையில் மந்தமான வாக்குப்பதிவு

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைக் காட்டிலும் சென்னையில் வாக்குப்பதிவானது தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைக் காட்டிலும் சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் தொடர்ந்து மந்தமாக உள்ளது. காலை முதலே தேர்தலில் வாக்களிக்க சென்னையில் வாக்காளர்கள் ஈடுபாடு காட்டாத நிலையில் மாலை 3 மணி வரையிலான நிலவரப்படி மொத்தம் 31.89 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளன. 

காலை 9 மணிக்கு 3.96%, 11 மணிக்கு 17.88% வாக்குகள், பிற்பகல் 1 மணிக்கு 23.42% வாக்குகள் சென்னையில் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com