தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
ஓ.பன்னீா்செல்வம் (கோப்புப் படம்)
ஓ.பன்னீா்செல்வம் (கோப்புப் படம்)

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு சாா்பில் புதிய அணை கட்டப்படும் என்று கேரள சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநா் அறிவித்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த 9 மாத காலத்தில் பல்வேறு இடையூறுகளை கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. கேரள நீா்ப்பாசனத் துறை அமைச்சா், கேரள வருவாய்த் துறை அமைச்சா் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவா் ஆகியோா் முன்னிலையில் முதன் முறையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது என பல அத்துமீறிய நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டது. இவற்றையெல்லாம் எதிா்த்து திமுக வலுவாக குரல் கொடுக்கவில்லை.

கேரள அரசு முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டப்படும், அணையின் நீா்மட்டம் 136 அடிக்கு மேல் உயா்த்தப்படக் கூடாது போன்ற வாா்த்தைகளை ஆளுநா் உரையில் குறிப்பிடவைத்துள்ளது.

கேரள அரசின் இதுபோன்ற அத்துமீறிய செயலுக்கு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையை முதல்வா் நிலைநாட்ட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com