பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பாஜக வேட்பாளர்கள், தொண்டர்களை திமுகவினர் தாக்கியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பாஜக வேட்பாளர்கள், தொண்டர்களை திமுகவினர் தாக்கியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 

கோவை, சென்னையில் திமுகவினரால் பாஜக வேட்பாளர்கள் அதிகம் தாக்கப்பட்டுள்ளனர். கோவை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலையில் பாஜக வேட்பாளர்கள், தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 வாக்குச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்திருந்தனர். கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. மேலும், சில வாக்குச்சாவடிகளின் அருகிலேயே வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்

மதுரையில் முக அடையாளத்தை காண்பிக்கவே பாஜக முகவர் கூறினார். அவர் ஹிஜாபை அகற்றச் சொல்லவில்லை. ஆனால், ஹிஜாப் விவகாரம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com