ஒசூர் மாநகராட்சி தேர்தல்: சட்டக்கல்லூரி மாணவி யஸஷ்வினி வெற்றி

ஒசூர் மாநகராட்சி தேர்தலில் 42 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்டன.
ஒசூர் மாநகராட்சி தேர்தலில் 13 வது வார்டில் போட்டியிட்ட சட்டக்கல்லூரி மாணவி யஸ்ஷ்வினி.
ஒசூர் மாநகராட்சி தேர்தலில் 13 வது வார்டில் போட்டியிட்ட சட்டக்கல்லூரி மாணவி யஸ்ஷ்வினி.

ஒசூர் மாநகராட்சி தேர்தலில் 42 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்டன. அதில் 13 வது வார்டில் சட்டக்கல்லூரி மாணவி யஷ்வினி போட்டியிட்டார். அவர் 1146 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேவதி 506 வாக்குகளை பெற்றுள்ளார். 640 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டக்கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார். 

இவர் பெங்களூர் அல்-அமீன் சட்டக் கல்லூரியில்  மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் . இவரது கணவர் மோகன் ஒசூரில் வியாபாரம் செய்து வருகிறார். எந்த அரசியல் பின்புலம் இல்லாமல் திமுகவில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது "இவர் மக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் போட்டியிட்டது. மக்களுடன் மக்களாக இருந்து சேவை செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் சட்டக் கல்லூரியில் படித்து வந்தாலும் மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்ய விரும்புகிறேன் என தெரிவித்தார்.13-ஆவது வார்டு என்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் ஏ.சத்யா ஆகியோர் பாராட்டினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com