தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 சரிவு!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 1,200 குறைந்தது. 
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 சரிவு!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 1,200 குறைந்தது. 

கடந்த சில மாதங்களாக தங்கம் விலையில் பெரிதளவு மாற்றமில்லை. அதேநேரத்தில் நூற்றுக்கணக்கில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவந்தது. 

இந்நிலையில் நேற்று ரஷ்யா-உக்ரைன் போர்ச் சூழல் காரணமாகவும் பங்குச்சந்தை சரிவின் காரணமாகவும் நேற்று தங்கம் விலை எதிர்பாராதவகையில் சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து, ரூ.39,608-க்கு விற்பனையானது. 

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 சரிந்து ரூ. 38,408-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 150 சரிந்து ரூ. 4,801-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் வெள்ளி ரூ. 2.70 குறைந்து ரூ. 70-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com