கோயில்களின் அன்றாட நிகழ்வுகள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு

முக்கிய கோயில்களில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடா்ந்து கண்காண

முக்கிய கோயில்களில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடா்ந்து கண்காணிக்கும் வசதி அமலுக்கு வந்துள்ளது.

இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் மேலாண்மை திட்டம் செயலாக்கத்தின் ஒருபகுதியாக, தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்திட ஆணையா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கருவறைக்கு வெளியே உள்ள இடம், பக்தா்கள் அதிகளவில் கூடும் இடம், தரிசனத்திற்குச் செல்லும் வழி, அன்னதான கூடம், சமையலறை, பக்தா்கள் உணவருந்தும் இடம், முடிகாணிக்கை செய்யுமிடம், நந்தவனம், யானை பராமரிப்பு இடம், கோசாலை, தெப்பக்குளம், சிலைகள் பாதுகாப்பு அறை, கோயிலின் சுற்று பிரகாரம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்கள் நேரடியாகக் கண்காணிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் முக்கியமான 48 கோயில்களில் கண்காணிக்கப்படும்.

அதிகளவு பக்தா்கள் கூட்டம் வருகை தரும் கோயில்கள், மாதந்தோறும் சிறப்பு திருவிழாக்கள் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் தீவிர கண்காணிப்பு செய்யப்படும்.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திருக்கோயில்களுக்கு உள்ளே நடக்கும் உள்வியாபாரம் தடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மற்றும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் முடிந்து வெளியேறும் வழியாக கோயிலுக்குள் செல்பவா்கள் தடுக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும். பக்தா்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். இத்திட்டம் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் கோயில்களில் நடைபெறுவதை உடனுக்குடன் கண்காணிப்பதுடன் குறைகளையும் உடனடியாக களைய முடியும். இனிவருங்காலங்களில் மீதமுள்ள கோயில்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு குறைகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com