திருச்சியில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

கர்நாடகாவும், கேரளாவும் தமிழக மக்கள் குடிப்பதற்கும், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் தர மறுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை வீணாக கடலில் விடுகிறார்கள்.
திருச்சியில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

கர்நாடகாவும், கேரளாவும் தமிழக மக்கள் குடிப்பதற்கும், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் தர மறுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை வீணாக கடலில் விடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் காவிரி, கொள்ளிடத்தில் உள்ள மணலை அள்ளி கேரளா, கர்நாடகத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது. 

எனவே அனுமதி வழங்கக் கூடாது. காவிரி, கொள்ளிடத்தில் லாரி மூலமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடுகின்றது. எனவே மணல் அள்ள அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு விவசாயிகள், சாலையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com