தேர்தலில் வெற்றி பெற்று 7 மாதமாகியும் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தமிழக அரசு தொடங்கவில்லை: வானதி சீனிவாசன்

தேர்தலில் வெற்றி பெற்று 7 மாதமாகியும் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை திமுக அரசு தொடங்கவில்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அரசியலுக்காக ஒற்றை செங்கல்லை வைத்து மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

தேர்தலில் வெற்றி பெற்று 7 மாதமாகியும் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை திமுக அரசு தொடங்கவில்லை. 

தொடர்ச்சியாக நிதி உதவி கிடைத்தால்தான் எய்ம்ஸ் மருத்துவமனை நடத்த வாய்ப்பு உள்ளது. கரோனா சூழ்நிலை காரணமாக ஜப்பான் குழு இங்கு வந்து ஆய்வு செய்ய தாமதமாகிறது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019- இல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் எந்தவித கட்டுமானப் பணிகளும் இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com