சென்னையில் மழைநீர் தேங்காமல் எப்படி தடுப்பது? முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுப்பது குறித்து ஆய்வுக் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுப்பது குறித்து ஆய்வுக் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னையில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வந்தார்.

இதற்கிடையே, ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மழை நீர் தேங்காமல் தடுப்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆய்வுக் குழுவினர் முதல்வரிடம் தங்கள் அறிக்கையை இன்று தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில், உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் நிரந்தர பணிகள் என்ற அடிப்படையில் சமர்பித்துள்ளனர்.

மேலும், மழைநீர் வடிகால் கால்வாய்களை அகலப்படுத்துவது, கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்டைவை குறித்தும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com