கூத்தாநல்லூர்: கஜா புயலில் பாதித்த வீடுகளுக்கு, கான்கிரீட் வீடு கட்டித்தர இந்திய கம்யூ. தீர்மானம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த சேகரை கிளையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது. 
கஜா புயலில் பாதித்த வீடுகளுக்கு, கான்கிரீட் வீடு கட்டித்தர இந்திய கம்யூ. தீர்மானம் நிறைவேற்றம்
கஜா புயலில் பாதித்த வீடுகளுக்கு, கான்கிரீட் வீடு கட்டித்தர இந்திய கம்யூ. தீர்மானம் நிறைவேற்றம்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த சேகரை கிளையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது. 

சி.பி.ஐ. கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ப.மாணிக்கத்தின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில், சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு, வீ.ரத்தினவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் இரெ.ஞானமோகன், மாநிலக் குழு உறுப்பினர் தீன. கெளதமன், மாவட்டக் குழு உறுப்பினர் சு.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை துணைச் செயலாளர் பொ.ராமமூர்த்தி  வரவேற்றார். 


மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினருமான எம். செல்வராஜ், செங்கொடியை ஏற்றி வைத்து, மாநாட்டை தொடங்கி வைத்தார். கூட்டத்தில், கிளைச் செயலாளராக கே.சுந்தர், துணைச் செயலாளர்களாக பொ.ராமமூர்த்தி .வே.செல்லப்பா உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

சேகரை கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் எடுக்கப்பட்ட குடிமனையில் உரியவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் குடிமனை பட்டா வழங்கப்பட வேண்டும். 

கஜா புயலில் பாதிக்கப்பட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக, புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும். 

சேகரை கிராமத்தில் உள்ள குளங்கள், பாசன வாய்க்கால், வடிகால்களை தூர் வார வேண்டும். சேகரை பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைத்துத்தர வேண்டும். 

சேகரை மிளகு குளம், பெரியார் நகர், ஆற்றங்கரை தெரு, நாடார் தெரு, காந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளின் தெருக்களுக்கு தார் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட வேண்டும். 

மிளகு குளத்தில் இடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குப் பதிலாக புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும். 

சேகரை சாலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீர் அதிக உப்பாக உள்ளது. இத்தொட்டிக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தூய்மையான குடிநீரை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. 

கூத்தாநல்லூர் வட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் சேகரை கிளை மாநாட்டில், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் யூ.மணியரசன், கோ.ராமச்சந்திரன், கே.சந்திரசேகர், எம்.ராமசாமி, எம்.கமால்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிளைச் செயலாளர் வே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com