டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடந்தது: அமைச்சர் செந்தில் பாலாஜி 

டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடந்தது: அமைச்சர் செந்தில் பாலாஜி 

டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

அண்மையில் தமிழகத்தில் டாஸ்மாக் சார்பாக பார் டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி பார் உரிமையாளர்கள் சென்னை, பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு முற்றுகையிட்டு இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை செந்தில் பாலாஜி, டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. டெண்டரில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை. 

15,387 டாஸ்மாக் கடைகளில் 2,168 இடங்களில் மட்டுமே பார் வசதி உள்ளது. மீதமுள்ள கடைகளுக்கும் பார் வசதி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போராட்டம் நடத்தியவர்கள் விதிமீறல் தொடர்பாக எந்த மனுவும் கொடுக்கவில்லை.

கரோனா காலம் என்பதால் கூடுதலாக 2 விதிகள் என 68 விதிகள் அடிப்படையில் பார் டெண்டர் விடப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com