டிஎன்பிஎஸ்சி மாதிரி வினாத்தாள்: வாட்ஸ்ஆப்பில் இலவசமாகப் பெறலாம்!

குரூப்- 2, குரூப்-4 தேர்வுகளுக்கான ’டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாத்தாள்கள்’ வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக  அனுப்பப்படும் என்று ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி மாதிரி வினாத்தாள்: வாட்ஸ்ஆப்பில் இலவசமாகப் பெறலாம்!


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்- 2, குரூப்-4 தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக ’டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாத்தாள்கள்’  அனுப்பப்படும் என்று ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி அறிவித்துள்ளது.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமி சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ மற்றும் குரூப்-4, வி.ஏ.ஓ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வெற்றிக்குப் பயன்படும் வகையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பாடத் திட்டத்தின்படி 2022 ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகளை கருத்தில் கொண்டு, இந்த டி.என்.பி.எஸ்.சி. மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

5  மாதிரி வினாத்தாள்கள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சியில், மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள திருக்குறள் உள்ளிட்ட புதிய பாடத்திட்டத்தை பின்பற்றி, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் ஐந்து மாதிரி வினாத்தாள்களை இலவசமாக ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி வெளியிடப்பட்டுள்ளது.  
 
வாட்ஸ்-அப்பில் பதிவு செய்க

இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற விரும்புவோர், தங்களது முழு முகவரியுடன்  ‘TNPSC Model Question Papers-2022’ என்று டைப் செய்து, 9843511188 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்த அனைவருக்கும் இ-புத்தகமாக (PDF வடிவில்) 5 மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு: ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, 142, ஜி.எஸ்.டி ரோடு, குரோம்பேட்டை, சென்னை-44. என்ற முகவரியில் நேரிலோ, 7825813573, 8939467323, 9843511188, 9943955511, 9962600043  ஆகிய எண்களிலோ அணுகலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com