பாஸ்டேக்கில் பணமில்லை: வைகுந்தம் சுங்கச்சாவடியை அரசுப் பேருந்து கடக்க தாமதம் 

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடியை கடக்க முயன்ற அரசுப் பேருந்து பாஸ்டேக் கணக்கு குளறுபடியால் 20 நிமிடம் தாமதமாக பவானி நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. 
வைகுந்தம் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து
வைகுந்தம் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடியை கடக்க முயன்ற அரசுப் பேருந்து பாஸ்டேக் கணக்கு குளறுபடியால் 20 நிமிடம் தாமதமாக பவானி நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. 

பேருந்து தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். 

சேலத்திலிருந்து  சங்ககிரி வழியாக பவானி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. வழக்கம் போல் சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடியை அரசு பேருந்து கடக்க முயன்றுள்ளது. அப்போது பாஸ்டேக்கில்  போதிய ரொக்கம் இல்லாததால் அக்கணக்கு சுங்கச்சாவடியின் இணையதளத்தில் காட்டாததால் சுங்கம் வசூலிக்கும் ஊழியர்கள் பேருந்தினை நிறுத்தி வைத்தாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தனர். அதனையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். 


இந்நிலையில் பேருந்து சுங்கச்சாவடி பகுதியில் 20 நிமிடம் நின்றதையடுத்து அப்பேருந்தில் பயணம் செய்த அரசு, தனியார்  நிறுவன  ஊழியர்கள் பணிகளுக்கு செல்ல நேரம் ஆகிவிட்டதால்  வருகின்ற அவ்வழியே வரும் வேறு ஒரு அரசு பேருந்தில் சங்ககிரிக்கு மாற்றி விடுமாறு கோரிக்கை விடுத்தனர். பயணிகள் அவர்களது கோரிக்கைகளை அழுத்தமாக எடுத்துரைக்க  அரசு பேருந்து அதிகாரிகள், சுங்கச்சாவடி மேலாளரிடம்  பேசியதை அடுத்து  பேருந்து சுங்கச்சாவடியிலிருந்து 20 நிமிடம் தாமதமாக சங்ககிரி நோக்கி புறப்பட்டுச்சென்றது.  பேருந்து தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் அரசு, தனியார் பணிகளுக்கு செல்லும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.  

அரசுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் இனி வரும் நாள்களில்  அரசு பேருந்துகளின் சுங்கச்சாவடி பாஸ்டேக் கட்டணங்களை முறையாக பராமகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com