எடப்பாடி அருகே குளவிகளை விரட்ட வைத்த தீயில் கூரை வீடு எரிந்து சாம்பல்

எடப்பாடி அருகே விவசாயி ஒருவர் தனது வீட்டின் கூரையில் இருந்த குளவிகளை விரட்ட வைக்கப்பட்ட தீயால் அவரது குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. 
எடப்பாடி அருகே குளவிகளை விரட்ட வைத்த தீயில் கூரை வீடு எரிந்து சாம்பல்
எடப்பாடி அருகே குளவிகளை விரட்ட வைத்த தீயில் கூரை வீடு எரிந்து சாம்பல்


எடப்பாடி: எடப்பாடி அருகே விவசாயி ஒருவர் தனது வீட்டின் கூரையில் இருந்த குளவிகளை விரட்ட வைக்கப்பட்ட தீயால் அவரது குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. 

எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட எல்லைமடை கிராமம், இங்குள்ள கிழக்குக்கரை கால்வாய் பகுதியை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான பாலன் (65), இவரது மனைவி குப்பாயி இத்தம்பதிகள் அதே பகுதியில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான கூரை வீட்டில் குடியிருந்து வந்தனர். 

இந்நிலையில் பாலனின் வீட்டுக் கூரையின் ஒரு பகுதியில், செங் குளவிகள் கூடு கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டில் குளவி கூடு கட்டுவது வீட்டிற்கு ஆகாது என கூறியுள்ளனர். 
இதனையடுத்து பாலன் குளவிகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பாலன் குளவிகளை விரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது பலனளிக்காத நிலையில் ஆத்திரமடைந்த பாலன், திங்களன்று மாலை ஒரு நீண்ட குச்சியில் துணிகளை சுற்றி அதில் மண்ணெண்ணையை ஊற்றி தீப்பந்தம் ஏற்றி உள்ளார். எரிந்துகொண்டிருந்த தீப்பந்தத்தை கூரைப் பகுதியில் இருந்த குளவிக்கூடுகட்டியிருந்த பகுதியில் காட்டியுள்ளார்.

வெப்பம் தாங்காமல் கூட்டில் இருந்த குளவிகள் நாலாபுறமும் சிதறி ஓடி உள்ளது, அதில் சில குளவிகள் பாலனை கொட்டுவதற்காக பறந்து வந்துள்ளது. இதில் நிலைதடுமாறி சாரிந்த பாலனின் கையிலிருந்த தீப்பந்தத்திலிருந்த தீ வீட்டின் கூரையில்  பற்றியது. காற்றின் வேகத்தால் மளமளவென பரவிய தீயால் வீடு முழுதும் எரிந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த எடப்பாடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நிலைய அலுவலர் ராமன், ஆறுமுகம்  ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இவ்விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com