துப்பாக்கி கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது: அன்புமணி

தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்குவதை அனுமதிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்குவதை அனுமதிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சென்னையிலும், திண்டுக்கல்லிலும் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்குவது மாநிலத்தின் அமைதியையும் வளா்ச்சியையும் சீா்குலைத்து விடும். அந்த முயற்சிகளை அரசு முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைக்கின்றன என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்களின் மீன்பிடி உரிமையை எடுப்பதில் குழு மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அந்த மோதல்கள் இப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி எதிரிகளை கொல்லும் அளவுக்கு கொடூரமாகியிருப்பது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். இது ஒடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத்துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது என்பதை காவல்துறையின் புள்ளி விவரங்களில் இருந்து அறியலாம்.

எனவே, துப்பாக்கிக் கலாசாரத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்புத் தணிக்கைகளை காவல்துறையினா் மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிக் கலாசாரத்தையும், அதை கடைப்பிடிக்கும் சமூக விரோத சக்திகளையும் கட்டுப்படுத்தி, தமிழக மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com