
கோப்புப்படம்
தமிழகத்தை சேர்ந்த 13 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து டிசம்பா் 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவா்களை, இலங்கை கடற்படையினா் சிறைப்பிடித்தனா். இதேபோல், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்களை, படகுகளுடன் அடுத்தடுத்த நாள்களில் சிறைப்பிடித்துச் சென்றனா். மொத்தம் 68 தமிழக மீனவா்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், மன்னார் நீதிமன்றம் இன்று வெளியிட்ட உத்தரவில்,
ராமேசுவரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன் 2 விசைப்படகுகளையும் திருப்பி வழங்குமாறு கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச்சேர்ந்த 13 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்பதனை மன்னாரில் உள்ள எமது வழக்கறிஞர் ஊடாக அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இதுகுறித்த விபரங்கள் தொடரும். @DrSJaishankar @MEAIndia
— India in Sri Lanka (@IndiainSL) January 5, 2022